புதன், 11 ஆகஸ்ட், 2010

கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்: அதிகாரிகளை திருப்பியனுப்பிய கிராம மக்கள்..!

Posted: June 14, 2010 by chillsam in chillsam for you..!
Tags: , , , , , , ,, , , , , , , , , , , , ,,
ஆத்தூர்: “கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம்’ என்று கூறிய கிராம மக்கள், “இலவச வீடே வேண்டாம்’ என, கூறி அதிகாரிகளை திருப்பியனுப்பினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியக்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட கருத்தராஜாபாளையம் கிராமத்தில் 600 குடியிருப்புகளில் 2,000த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கிராம மக்களின் குலதெய்வமாக பெரியசாமி ஸ்வாமி கோவில் உள்ளது. இரவு நேரத்தில் பெரியசாமி ஸ்வாமி கிராம பகுதி வழியாக வேட்டைக்கு செல்வதாகவும், ஊரை காப்பாற்றி பாதுகாத்து வருவதாகவும் மக்கள் நம்புகின்றனர்.

அதே போல கான்கிரீட் வீடோ, மாடி வீடோ கட்டினால் தெய்வ குற்றம் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அந்த கிராமத்தில் இன்றளவும் ஒரு கான்கிரீட் வீடுகூட இல்லை.

தமிழக அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்துக்காக குடிசை வீடுகளை கணக்கெடுக்கும் பணிக்கு சென்ற அலுவலர்கள், கருத்தராஜாபாளையத்தில் 300க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருப்பதை கண்டு கணக்கெடுப்பில் சேர்க்க முற்பட்டனர். பொதுமக்களோ, குடிசை வீடே போதும் என்று அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.

கருத்தராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி கூறியதாவது: கருத்தராஜாபாளையத்தில் பழமை வாய்ந்த பெரியசாமி, கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலிலுள்ள ஸ்வாமி நாள்தோறும் ஊஞ்சலில் அமர்ந்து விளையாடி வருவதால், வீடுகளில் படி வைத்து கட்ட கூடாது. மாடியில் நின்று ஸ்வாமியை பார்க்க கூடாது.

எனவே இன்றளவும் கூரை, ஓட்டு வில்லை வீடுகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளது.கான்கிரீட் வீடுகள் கட்டினால் தெய்வ குற்றமாகிவிடும். 140 ஆண்டுகளுக்கு மேலான ஓட்டு வில்லை வீடுகளே உள்ளன.

இரவில் பெரியசாமி ஸ்வாமி வேட்டைக்கு செல்வதால் கோவிலில் மின்விளக்கு போடுவதில்லை. வீடுகளில் குழந்தைகளை தொட்டில் கட்டி போட மாட்டோம். தரையில் தான் தூங்க வைப்போம். ஸ்வாமி கோவில் விழா நடத்தினால் விருந்து கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

மண்பானை செய்யும் குயவர்கள், மரம் மற்றும் நகை சிற்ப ஆசாரிகள் கிராமத்தில் இல்லை. உலி சத்தமும் கேட்க கூடாது. அவ்வாறு உறவினர்களாக குயவர், ஆசாரிகள் வந்தாலும் இரவில் தங்க கூடாது.

கிராமத்தில் இருவர் மாடி வீடுகளை கட்டினர். அவர்களது குடும்பத்தில் உடனடியாக பிள்ளைகள், மூத்தவர்கள் இறந்துவிட்டதோடு ஏழ்மை நிலைக்கு வந்தனர். அரசு தொகுப்பு வீடு கட்டிய வெங்கடேஷ், மருதை ஆகிய இருவரது வீட்டில் தந்தை இறந்தனர். தொகுப்பு வீட்டை இடித்து ஓட்டு வீடாக கட்டுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கிராம மக்கள் கூறியதாவது: மாரியம்மன் கோவில் கிணற்றை தூர் எடுத்தல், தேர் இழுத்தல், கபாடி போட்டிகள் நடத்தினால் மழை பொழியும்.கோவில் விழாவின்போது பெரியசாமி கோவிலில் ரேடியோ, மின்விளக்கு போன்றவைகள் பயன்படுத்துவதில்லை.

அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் கூரை வீடு குறித்து கணக்கெடுப்பு செய்ய வந்தனர். கான்கீரிட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றமாகி, கிராமத்திலுள்ளவர்கள் இறக்க நேரிடும் என விளக்கம் அளித்தோம். கூரை வீடுகளிலேயே வாழ்ந்தாலும் மாடி வீடு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டோம். கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சம் இல்லாத கிராமமாக இருக்க குலதெய்வம் தான் காரணம், என்றனர்.
-இது நாளிதழ் செய்தி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17537
ஊருக்கு ஒரு கோடாங்கியையும் நாட்டுக்கு ஒரு நாட்டாமையையும் வைத்துக்கொண்டு இந்த மக்கள் செய்கிற அலம்பல்கள் சொல்லிமாளாது;
இப்படியே கல்வி,சுகாதாரம்,வாகனப் போக்குவரத்து,விவசாய பயன்பாட்டு இயந்திரங்கள் என அனைத்திலும் இந்த மக்களை நம்பவைத்து அவர்கள் நிலையை மேம்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிறது;
அரசாங்க அதிகாரிகள் ஊழலால் சதுரமாகி முக்கோணமாகிப் போன அரசு ஏந்திரத்தை வைத்துக்கொண்டு எப்படியோ கொண்டு சென்று சேர்க்கப்பார்க்கும் திட்டங்களும் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளால் தடைபட்டு நிற்கிறது;
அரசாங்கத்தை மக்கள் நம்புவதற்கும் மக்களை அரசாங்கம் நம்பவைப்பதற்கும் படுகிற பாடுகளைப் பார்த்து இறைவன் நகைக்கிறான்..!
Rate This